உலக அளவில் 92 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு!
உலக அளவில் 92 லட்சத்தை நெருங்கிய கொரோனா பாதிப்பு.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த உலக நாடுகள் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இதுவரை இந்த கொரோனா வைரஸால், உலக அளவில், 9,186,153 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 474,260 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 4,936,778 பேர் இந்த வைரஸ் நோயிலிருந்து மீண்டு எழுந்துள்ளனர். நாளுக்கு நாள் இந்த வைரஸ் நோயின் தர்க்கம் தீவிரமாகி வருகிற நிலையில், உலக நாடுகள் இதனை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியிலும் தீவிரமாக இறங்கியுள்ளது.