கொரோனா: உலகளவில் 4,627 பலி, சீனாவில் மட்டும் 3,169 பேர் உயிரிழப்பு.!
சீனாவின் ஊஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ், மொத்த உலகையும் கதிகலங்க வைத்துள்ளது. இதன் விளைவு காரணமாக பல நாடுகளில் பல கட்டுப்பாடுகள் சட்டம் போடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவி வருவதால், இத்தாலி உள்ளிட்ட ஒரு சில நாடுகள் முழுவதும் முழு அடைப்பு அறிவித்துள்ளது. கொரோனவால் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் உலகளவில் கொரோனா வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,295லிருந்து 4,627 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,19,176லிருந்து 1,26,139 ஆக அதிகரித்துள்ளது. பின்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தோரில் 68,240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே சீனாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,158லிருந்து 3,169ஆக உயர்ந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 80,778லிருந்து 80,796ஐ எட்டியுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா இதுவரை 123 நாடுகளுக்கு பரவியுள்ளது. இதையடுத்து இத்தாலியில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 827 ஆக அதிகரித்துள்ளது.