கொரோனா வைரஸின் பாதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதுவரை 48 லட்சத்துக்கு மேற்பட்டோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் கொரோனா உருவாக்கிய சீனாவிலேயே 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தான் இதனால் பாதிக்கப்பட்டு இருந்தனர். ஆனால் வல்லரசு நாடான அமெரிக்காவில் பாதிப்பின் எண்ணிக்கை மட்டும் 15 லட்சத்தை தாண்டி உள்ளது.
இதுவரை அமெரிக்காவில் 1,527,664 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 90,978 பேர் உயிரிழந்துள்ளனர். இதனை தொடர்ந்து அதிக அளவு பாதிப்பையும் உயிர் சேதத்தையும் கொண்ட நாடாக அமெரிக்கா கருதப்பட்டது.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் வைரஸின் தாக்கம் படிப்படியாக குறைந்து கொண்டே வருவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து, அவர் கூறுகையில் சில விதி விலக்குகளைத் தவிர அமெரிக்கா முழுவதும் வைரசால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சரியத் தொடங்கியுள்ளது. இது உண்மையாக நல்ல விஷயம் தான் எனக் கூறியுள்ளார்.
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…
கேரளா : கேரள மாநிலத்தில் வயநாடு மக்களவை தொகுதி, செலக்கரா மற்றும் பாலக்காடு சட்டமன்ற தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் பதிவான…
கர்நாடகா : மாநிலத்தில், மூன்று சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல்…
வயநாடு : இந்த ஆண்டில் முன்னதாக நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு…
மும்பை : மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது. அதில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஒன்று உருவாகியுள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் அடுத்த…