கொரோனாவின் கோரப்பிடியில் சிக்கிய உலகம்..உயிரிழப்பு எண்ணிக்கை அரை கோடியை தாண்டியது.
விடாத கொரோனா உலகளவில் 1 கோடியை கடந்தது கொரோனா பாதிப்பு. உயிரிழப்பு எண்ணிக்கை அரை கோடியை தாண்டியது.
சில வாரங்களாக ஒட்டுமொத்த இறப்பு விகிதம் குறிப்பிட்ட நாடுகளான அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் போன்ற நாடுகளில் பதிவுசெய்யப்பட்ட புதிய கொரோனா தொற்று மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் புதிய இறப்புகள் குறித்து சுகாதார வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
தற்போது உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையானது 10,250,325 ஆக உயர்ந்துள்ளது; இவ்வைரஸில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கையானது 5,558,161 ஆக உயர்ந்து உள்ளது; வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 504,502 ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவை குறிவைக்கும் கொரோனா தொடர்ந்து உலகளவில் முதலிடத்தை பிடித்து இருக்கிறது. அந்த வரிசையில் இந்தியா தற்போது நான்காவது இடத்தில உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் 5.48 லட்சத்தை கடந்தாகவும் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,48,318 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ள அமைச்சகம் வைரஸ் பாதிப்பானது கடந்த 24 மணி நேரத்தில் 19,459 பேருக்கு கொரோனா மேலும் 12,010 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் இதுவரை இத்தொற்றுக்கு மொத்தம் 16,475 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் 3,21,723 பேர் குணமடைந்துள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.