உலகளவில் கொரோனா பாதிப்பு 38,22,989 ஆக உயர்வு.!

Default Image

உலகளவில் கொரோனாவால் 38,22,989 பேர் பாதிக்கப்பட்டு, 2,65,084 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் உலக முழுவதும் பரவி தீவிரமடைந்து வருகிறது. இதன் விளைவு காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால் மக்களின் அன்றாட இயல்வு வாழ்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஊரடங்கால் பொருளாதார ரீதியில் கடும் சரிவை கண்டுள்ளது. கொரோனா நிவாரணம் மற்றும் பொருளாதாரத்தை மேம்படுத்த மக்களும் தங்களால் முடிந்த நிதியை அளித்து வருகிறார்கள். அதுபோன்று வங்கிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை கடனுதவி வழங்கி வருகிறது. 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒரே வழி அதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பது. தற்போது வரை அதற்கான சரியான மருந்தை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், இங்கிலாந்தில் தடுப்பு மருந்து கண்டுபிடித்ததாக தகவல் வெளியாகின. தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஒரு ஆண்டு எடுத்துக்கொள்ளும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதனால் உலகநாடுகள் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர். கொரோனாவை ஒழிக்க தற்போது இருக்கும் ஒரே வழி தனிமனித இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிவது தங்கள் கைகளை சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற செயல்களை செய்தால் வைரஸிடம் இருந்து சற்று தப்பிக்கலாம்.

உலகளவில் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போதைய நிலவரப்படி 38,22,989 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு இதுவரை 2,65,084 பேர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே பாதிக்கப்பட்ட 38,22,989 பேரில் 13,02,995 பேர் குணமடைந்து உள்ளனர். உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 12,63,183 பேர் பாதிக்கப்பட்டு, 74,807 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஸ்பெயினில் 2,53,682 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,857 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலி நாட்டில் கொரோனாவால் 2,14,457 பேர் பாதிக்கப்பட்டு, இதுவரை 29,684 பேர் பலியாகியுள்ளனர். அந்நாடுகளில் முன்பை விட தற்போது கொரோனா தாக்கம் சற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் சில தளர்வுகளை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்