பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 14, 612 ஆக உயர்வு

பாகிஸ்தானில் கொரோனா பாதிப்பு 14, 612 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா வைரஸ் முதலில் சீனாவில் பரவியது.இதனையடுத்து உலகம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது.உலகம் முழுவதும் தற்போதைய நிலவரப்படி, 31,13,447 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 9,25,730 பேர் குணமடைந்துள்ளனர்.2,16,930 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. அங்கு 10,34,588 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் இந்தியாவின் அருகில் உள்ள நாடான பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14612-ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3233 ஆக உள்ளது.312 பேர் உயிரிழந்துள்ளனர்.