இந்தியாவில் கொரோனா பலி 353 ஆக உயர்வு.! பாதிப்பு எண்ணிக்கை 10,815 ஆக அதிகரிப்பு.!

Default Image

இந்தியாவில் கொரோனா தீவிரமடைந்து வருவதால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் இன்றுடன் நிறைவடைய இருந்த ஊரடங்கு மேலும் 19 நாட்களுக்கு நீடிக்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதனிடையே காலை நிலவரப்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339 ஆகவும் இருந்தது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1036 பேர் குணமடைந்துள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,363 லிருந்து 10815 ஆக உயர்ந்துள்ளது. அதுபோல உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 339 லிருந்து 353 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 1190 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

Posted in Uncategorized

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tvk
TVK General Committee meeting
edappadi palanisamy sabanayagar appavu
Tamilnadu CM MK Stalin
Nitish Kumar Reddy
Bussy Anand
klassen srh