“குக்கீசுடன் சானிடைசர் வைத்தால் கிறிஸ்துமஸ் தாத்தா வருவாரா?”- பிரதமருக்கு கடிதம் எழுதிய 8 வயது சிறுவன்!
கொரோனா பரவும் சூழலில், குக்கீசுடன் சானிடைசர் வைத்தால் கிறிஸ்துமஸ் தாத்தா வருவாரா? என பிரிட்டன் பிரதமருக்கு 8 வயது சிறுவன் கடிதமெழுதியுள்ளார்.
உலகளவில் கொரோனா வைரஸில் தாக்கம் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இதன்காரணமாக பண்டிகைகளை கொண்டாடுவதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கவுள்ளதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் கேள்விக்குறியானது. மேலும், இந்த பண்டிகை காலங்களில் பட்டாசுகள் வெடிக்கக்கூடாது என பல நாட்டில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிரிட்டனில் வசிக்கும் 8 வயது சிறுவனான மோன்டி, அந்நாட்டுஅதிபர் போரிஸ் ஜான்சனுக்கு கடிதம் ஒன்றை எழுதியனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், “இந்தாண்டு கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது சாண்டா (கிறிஸ்துமஸ் தாத்தா) வருவாரா? குக்கீசுடன் சானிடைசர் வைத்தால் அவர் வருவாரா? இல்லையெனில், அவர் கைகளை கழுவிக்கொண்டு வருவாரா? எனவும், நீங்கள் பிசியாக இருப்பீர்கள் என்று தெரியும். ஆனாலும் இதை நீங்களும், உங்களின் விஞ்ஞானிகளும் இதைப்பற்றி ஆலோசிக்கலாமே? என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கு பதிலளித்த அந்நாட்டு அதிபர் போரிஸ் ஜான்சன், இதேபோல பல ஆயிர குழந்தைகள் தனக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், கொரோனா காலத்திலும் பாதர் கிறிஸ்துமஸ் அவரின் பரிசை கொண்டுவருவார் என தெரிவித்தார். மேலும், அந்த 8 வயது சிறுவனின் கடிதத்தில் குறிப்பிட்டுள்ள குக்கீசுடன் சானிடைஸிர் வைக்கலாம் என்ற யோசனை, அருமையான யோசனை என தெரிவித்துள்ளார்.
Monti (aged 8) wrote to me asking if Father Christmas will be able to deliver presents this year ????????????
I’ve had lots of letters about this, so I have spoken with experts and can assure you that Father Christmas will be packing his sleigh and delivering presents this Christmas! pic.twitter.com/pXwcjHSxZg
— Boris Johnson (@BorisJohnson) November 25, 2020