கொரோனா தடுப்பூசி உலகம் முழுவதிலும் உள்ள அனைவருக்கும் செலுத்தப்பட்டு முடிக்கும் வரை கொரோனாவுக்கு முடிவு கிடைக்காது என ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அவர்கள் கூறியுள்ளார்.
ஜீ 7 உறுப்பு நாடுகளுக்கு இடையேயான கூட்டமைப்பில் பேசிய ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அவர்கள், உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸுக்கான தடுப்பூசியை அனைவரும் செலுத்திக் கொண்டால் மட்டுமே கொரோனாவை முடிவுக்கு கொண்டுவர முடியும் எனவும், இல்லையென்றால் கொரோனாவுக்கு முடிவு கிடைக்காது எனவும் தெரிவித்துள்ளார். மேலும் ஜெர்மனி உள்ளிட்ட மற்ற பிற நாடுகளுக்கும் கொரோனா தடுப்பு மருந்துகள் சென்றடைய வேண்டும் எனவும் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
மேலும், சீனாவைத் தொடர்ந்து பிரிட்டனில் பரவத் தொடங்கிய உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் தற்பொழுது ஜெர்மனி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகளிலும் பரவி வருவதால் உலக நாடுகள் கொரோனா மருத்துவ பரிசோதனைகளை தீவிரப்படுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். உலக சுகாதார அமைப்பு சார்பாக சமூக விலகலை மக்கள் பின்பற்ற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், மக்கள் அவற்றை கடைபிடியுங்கள் என கூறியுள்ளார்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…