கொரோனா தானாக அழிந்துவிடும் – WHO விஞ்ஞானி தகவல்!

Default Image

கொரோனா வைரஸ் நாளடைவில் தானாக அழிந்து விடும் என உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. இதுவரை 48 லட்சம் பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மூன்று லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த வைரசுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்நிலையில் கடந்த 2002ஆம் ஆண்டு உருவான சார்ஸ் நோய்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், அது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல செர்ஸ் 2012 ஆம் ஆண்டில் உருவாகி பல்லாயிரக்கணக்கானோரை உயிரிழக்க செய்தது. ஆனாலும், இந்த நோய்களுக்கு மருந்து இன்னும் கண்டுபிடிக்கப் படவில்லை. இருந்தபோதிலும் ஆராய்ச்சிகளும் பரிசோதனைகளும்  நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன.

ஆனால் அந்தக் கிருமிகளை போல கொரோனா சாதாரணமாக இல்லாமல் அதிக அளவு உயிர் பலிகளை வாங்கியுள்ளது. மட்டுமல்லாமல் விரைவில் பரவி வரும் தன்மை கொண்டுள்ளதால் இதற்கு இங்கிலாந்து சீனா இந்தியா அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் மருந்து மும்முரமாக கண்டுபிடிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் சீனா மற்றும் இங்கிலாந்தில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டு மனித உடலில் செலுத்தி ஆராய்ச்சி நடக்கிறது.

அது போல இங்கிலாந்து ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகத்திலும் குரங்கின் உடலில் செலுத்தி வைரஸ் நுழைய விடாமல் தடுத்து நிறுத்த முடியும் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு மருத்துவ சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் வைரசுக்கு எதிராக நடைபெற்றுக் கொண்டே வந்தாலும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத சூழ்நிலையும் அதிக அளவு பாதிப்புகள் ஏற்பட்டு கொண்டிருக்கிறது.

 இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் புற்றுநோயியல் துறை முன்னாள் விஞ்ஞானியும், கல்வியாளருமாகிய கரோல் சிகோரா இது குறித்து பேசிய போது,மருந்து கண்டுபிடிக்கும் முன்பே கொரோனா நோய்க்கிருமி தானாக இயற்கையாகவே அழிந்துவிடும் என்று  தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நாம் நினைப்பதைவிட நமக்கு அதிகமாகவே நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும் கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்தினால் நோய்க்கிருமி படிப்படியாக அழிந்துவிடும் என்றும் அவர் கூறியுள்ளார். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்