2.13 கோடியாக அதிகரித்த கொரோனா பாதிப்பு – குணமாகியவர்கள் எண்ணிக்கை எவ்வளவு?
உலககம் முழுவதிலும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2.13 கோடியாக அதிகரித்துள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு ஒவ்வொரு நாளும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறதே தவிர குறைந்தபாடில்லை. இதுவரை கொரோனா தொற்றால் 21,354,686 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 763,353 பேர் உயிரிழந்துள்ளனர், 14,145,837 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். நாளுக்கு நாள் குணமாகுபவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.
கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகம் முழுவதிலும் புதிதாக 285,994 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். மேலும், நேற்று ஒரே நாளில் 5,946 பேர் உயிரிழந்துள்ளனர். தற்பொழுது மருத்துவமனைகளில் 6,442,152 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.