“வூஹான் ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது.. அதற்கான ஆதாரங்கள் இருக்கிறது!”- சீன மருத்துவர் பரபரப்பு தகவல்

Default Image

கொரோனா வைரஸ், வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இயற்கையாக உருவானது கிடையாது. அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாக சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லி மெங் யான் தெரிவித்துள்ளார்.

சீனாவில் கடந்தாண்டு டிசம்பரில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த வைரஸ் தாக்கத்தால் உலகளவில் இதுவரை 2.91 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9.28 லட்ச பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்காரணமாக வூஹானில் உள்ள ஆய்வகத்தில் இருந்து தான் கொரோனா வைரஸ் பரவிய உண்மைகளை சீனா மறைத்து விட்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் கொரோனா பரவல் தொடங்கிய போதே குற்றம் சாட்டி வந்தனர். அதனை சீனா தொடர்ந்து மறுத்துக்கொண்டே வந்தது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் இயற்கையானதில்லை எனவும், அதனை சீன அரசு கட்டுப்பாட்டில் உள்ள வூஹான் ஆய்வகத்தில் தான் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான ஆதாரங்கள் தன்னிடம் உள்ளதாகவும் சீன வைராலஜிஸ்ட் டாக்டர் லி மெங் யான் தெரிவித்துள்ளார். ஹாங்காங் பொது சுகாதார மையத்தில் பணியாற்றும் டாக்டர் லி மெங் யான், சீனாவில் இருப்பது தனக்கு பாதுகாப்பற்றது என அறிந்தார்.

இதனால் அவர் அமெரிக்க சென்றடைந்தார். அப்பொழுது இந்த சம்பவம் குறித்து கடந்த செப்ட். 11 ஆம் தேதி “லூஸ் வுமன்” என்ற பிரிட்டிஷ் தொலைக்காட்சி நேர்காணலில் தெரிவித்துள்ளார். அதில் பேசிய அவர், கொரோனா வைரஸ், இயற்கையாக உருவாகவில்லை எனவும், அது வூஹான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். அதற்கான ஆதாரங்களும் தன்னிடம் இருப்பதாகவும், விரைவில் அதனை வெளியிடப்போவதாக அந்த நேர்காணலில் தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், கொரோனா தொடர்பாகவும், அதனை எதிர்கொள்ளுவது தொடர்பாக அவர் ஜனவரி முதல் ஆய்வுகளை மேற்கொண்டு வந்ததாகவும், அதனை அதிகாரிகளிடம் கொடுத்தேன். சீன அரசு மற்றும் உலக சுகாதாரத்துறை அமைச்சகம் இதுகுறித்து நல்ல முடிவினை எடுப்பார்கள் என நம்பினேன். ஆனால் சீன அரசுக்கு பயந்து கொண்டு யாரும் அதனை வெளியிட மறுப்பு தெரிவித்தனர். மேலும், உண்மையை மக்களுக்கு தெரியாமல் மறைக்க பார்க்கின்றதாக தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, வுஹான் ஆய்வகத்தில் தான் கொரோனா வைரஸ் கண்டுபிடித்ததற்கான இரண்டு அறிக்கைகள் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். முதலாவது அறிக்கை, ஒரு சில நாட்களில் வெளியிடப்போவதாக தெரிவித்த அவர், இது அறிவியல் சான்றுகளைப் பற்றி மக்களுக்கு எடுத்து சொல்லும் என அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும், வைரஸின் தோற்றத்தை அறிந்து கொள்வது முக்கியமான விஷயம். இல்லையென்றால் அது மக்களின் உயிருக்கு கூடம் ஆபத்தானதாக இருக்குமென தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்