கொரோனா வைரஸ் தடுப்பூசி 2020 இறுதிக்குள் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிட வாய்ப்பு இருக்கிறது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போது, உலகளவில் 40 கொரோனா தடுப்பூசி மருத்துவ பரிசோதனைகளில் உள்ளது. அதில், 10 தடுப்பூசி மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ளது. அவை, மருத்துவ பரிசோதனையின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் பற்றி தெரிவிக்கப்படும்.
இந்நிலையில், கொரோனாவுக்கான தடுப்பூசியை இந்த ஆண்டு டிசம்பர் முதல் 2021 ஆம் ஆண்டின் முற்பகுதி வரை எதிர்பார்க்கலாம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சவுமியா சுவாமிநாதன் செய்தியாளர்களிடம் கூறினார்.
அந்த வகையில், கொரோனா வைரஸ் தடுப்பூசியை உருவாக்கும் போட்டியில் பல நாடுகள் உள்ளன. இருப்பினும், இதுவரை உலக சுகாதார அமைப்பின் அங்கீகரிக்கப்பட்ட 3 கட்டம் சோதனைகளை யாரும் நிறைவேற்றவில்லை. இந்த ஆண்டு இறுதிக்குள் பல தடுப்பூசிகள் உலக சுகாதார அமைப்பில் பதிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றுவரை, உலகளவில் 37 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர், 1.07 மில்லியனுக்கும் அதிகமான உயிரிழந்துள்ளனர் என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
மும்பை : ஐபிஎல் 2025-ன் 33வது போட்டி மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. முதலில்…
மும்பை : மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. டாஸ்…
மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…
பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…
சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…
சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,…