எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் 36 முறை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்…!
- எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் 36 முறை உருமாற்றம் அடைந்த கொரோனா வைரஸ்.
- பெண்ணின் உடலில் கொரோனா 200 நாட்களுக்கும் மேலாக இருந்தாலும், அறிகுறிகள் பெரிய அளவில் இல்லை.
உலகம் முழுவதும் கடந்த ஒரு வருடமாக கொரோனா வைரஸ் பாதிப்பு மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸில் இருந்து மக்களை மீட்டெடுக்க ஒவ்வொரு நாடும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது அனைத்து நாடுகளிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் 36 வயதான பெண்மணி ஒருவருக்கு கடந்த ஆண்டு 2006 ஆம் ஆண்டு எய்ட்ஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தப் பெண்ணின் உடலில் காலப்போக்கில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து உள்ளது இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
பொதுவாக ஒருவரது உடலில் கொரோனா வைரஸ் 15 முதல் 20 நாட்கள் வரை தான் இருக்கும். ஆனால் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருந்ததால் அப்பெண்ணின் உடலில் கொரோனா வைரஸ் சுமார் 216 நாட்கள் இருந்துள்ளது. இந்த நாட்களில் இந்த கொரோனா வைரஸ் ஆனது குறைந்தபட்சம் 32 முறை அவரது உடலில் உருமாறி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மேலும் இதுகுறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், எய்ட்ஸ் நோயாளிகள் மூலமாக கோரோனோ அதிகம் பரவ வாய்ப்புள்ளதா என்று நம்மால் உறுதியாக கூறமுடியாது. எய்ட்ஸ் நோயாளிகள் மத்தியில் கொரோனா தொற்று அதிகமான னாட்கள் இருந்தால் அவர்கள் உருமாறிய கொரோனாவை உருவாக்கும் தொழிற்சாலை ஆக மாறிவிடும் அபாயம் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் அந்த பெண்ணின் உடலில் கொரோனா 200 நாட்களுக்கும் மேலாக இருந்தாலும், அறிகுறிகள் பெரிய அளவில் இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.