அமெரிக்காவில் கொரோனா வைரஸ்! அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை!
கொரோனா வைரஸ் பரவல் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. அந்த வகையில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், உலக அளவில், 15,101,115 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 619,647 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உலகளவில் கொரோனா பாதிப்பில், வல்லரசு நாடான அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது. இந்த வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் இதுவரை, 4,028,733 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 144,958 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் கூட்டத்தில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் பேசுகையில், நாட்டின் சில பகுதிகள் மிகச் சிறப்பாக செயல்படுகின்றன. தெற்கின் பல பகுதிகளில் வைரஸ் பாதிப்புகள் அதிகரித்துள்ளன. அமெரிக்காவில் 141,000 க்கும் அதிகமானோர் பலி கொண்டுள்ள மிகவும் கொடூர தொற்றுநோயான வைரஸ் பரவாமல் தடுக்க முகக்கவசம் அணியுங்கள் என தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், உங்களால் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாதபோது, முகக்கவசம் அணியுங்கள் என்றும், நீங்கள் முகக்கவசத்தை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும், அவை ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்றும், தடுப்பூசிகள் வருகின்றன, யாரும் நினைத்ததை விட அவை மிக விரைவில் வருகின்றன. வைரஸ் விரைவில் மறைந்துவிடும். நெருக்கடி மேம்பாடு அடைவதற்கு முன்பு மோசமடையக்கூடும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.