பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட இறைச்சியில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சீனாவில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த ஆண்டு சீனாவில் உள்ள வுஹான் நகரில் உருவாகி பரவ ஆரம்பித்த கொரானா வைரஸ் தற்போது உலக நாடுகளை எல்லாம் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்நிலையில் தற்போது சீனாவின் ஷென்ஷென் எனும் நகரில் பிரேசில் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கோழி இறைச்சியின் மேற்பரப்பில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரியை சோதித்து பார்த்தபோது அதில் கொரானா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கோழி இறைச்சி பிரேசில் நாட்டின் தென் மாகாணமான அரோரா அலிமென்டோசில் எனும் ஆலையில் இருந்து வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் காரணமாக ஷென்ஷென் நகர மக்கள் இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்குமாறு உள்ளூர் அரசு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதுபற்றி அரசு தரப்பில் கூறும்போது, இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் நீர்வாழ் பொருட்களை வாங்கும்பொழுது நுகர்வோர் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். ஏற்கனவே சீனாவின் பிற நகரங்களில் இறக்குமதி செய்யப்பட்ட பதப்படுத்தப்பட்ட கடல் உணவுகளின் பேக்கேஜ் மேற்பரப்பில் கொரானா வைரஸ் தொற்று இருந்ததாக தகவல் வெளியாகியது, இந்நிலையில் தற்பொழுது ஷென்ஷென் நகரில் வெளியாகியுள்ள இந்த தகவல் மக்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…
சென்னை : நயன்தாரா மற்றும் தனுஷ் இருவரும் ஒன்றாக யாரடி நீ மோகினி, நானும் ரவுடி தான், எதிர்நீச்சல் ஆகிய…
ஜான்சி : உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி நகரில் உள்ள ராணி லட்சுமி பாய் அரசு மருத்துவமனையில் உள்ள குழந்தைகள்…
சென்னை -சபரி மலை ஐயப்பனுக்கு மாலை அணிந்த பின் என்ன செய்யலாம்.. செய்ய கூடாது என்பதை இந்த செய்தி குறிப்பில்…
கோவை : பட்டணம் , பட்டணம் புதூர் , கம்பன் நகர் , நொயல் நகர் , சத்தியநாராயண புரம்…