கொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் ஆய்வகத்தில் இருந்து வெளியானதற்கான சாத்தியம் இருப்பதாக இங்கிலாந்தின் புலனாய்வு முகமை தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வரும் நிலையில்,முதன்முதலில் கொரோனா எங்கிருந்து உருவானது என்பதை அறிய உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில்,கொரோனா வைரஸ் சீனாவின் உயிரியல் ஆய்வகத்தில் இருந்து வெளியானதற்கான சாத்தியம் இருப்பதாக,இங்கிலாந்தின் புலனாய்வு முகமை அதிகாரிகள் ஆதாரம் திரட்டியுள்ளனர்.
இதனையடுத்து,கொரோனா தோற்றம் குறித்து உலக சுகாதார நிறுவனம் முழுமையாக புலனாய்வு செய்ய வேண்டும் என்று இங்கிலாந்தின் தடுப்பூசிகள் துறை அமைச்சர் நதீம் ஜகாவி வலியுறுத்தினார்.
இதனைத் தொடர்ந்து,பிரிட்டன் உட்பட மேற்கத்திய நாடுகளின் புலனாய்வு விசாரணையில்,கொரோனா வைரஸானது வௌவால்களின் உடலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது என்பது உறுதியானது.
இருப்பினும் அதன்பின்னர்,மீண்டும் கொரோனா தோற்றம் குறித்து ஆய்வாளர்கள் உறுதி செய்த தகவல்களை சுட்டிகாட்டி, தி சண்டே டைம்ஸ் என்ற ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டது.
அந்த செய்தியில்,கொரோனா முதன்முதலில் பரவிய இடமான சீனாவின் வுஹான் மார்க்கெட்,அந்நாட்டின் வைரஸ் ஆராய்ச்சி மையம் அருகே இருப்பதாகவும்,அதனால்,அந்த ஆய்வகத்தில் இருந்து கொரோனா பரவியதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து,லண்டனில் உள்ள டெய்லி மெயில் என்ற பத்திரிக்கையானது,சீன விஞ்ஞானிகள் கொரோனா வைரஸை உருவாக்கினார்கள் என்றும்,பின்னர் அதனை இயற்கையாக வௌவால்களிலிருந்து உருவானது போல காட்டுவதற்காக மறுஉருவாக்கம் செய்ததாகவும் தனது இதழில் தெரிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏமன் : அமெரிக்க ராணுவம் நேற்று (ஏப்ரல் 17) ஏமனின் ஹொதெய்தா மாகாணத்தில் உள்ள ராஸ் இசா எண்ணெய் துறைமுகத்தின்…
சென்னை : வழக்கு எண் 18/9, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், இறுகப்பற்று ஆகிய திரைப்படங்க்ளில் நடித்து தமிழ் சினிமாவில் நல்ல…
சென்னை : இன்று உலகம் முழுக்க கிறிஸ்தவ மதத்தினர் துக்க நாளாக அனுசரிக்கும் புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. இன்றைய…
மும்பை : நேற்று (ஏப்ரல் 17) ஐபிஎல் தொடரின் 33வது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் (MI) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியா? வெற்றி பெற்ற பிறகு கூட்டணி அரசா என்ற…
"எல்லாரும் அண்ணாமலையுடன் சேர்ந்து பயணிப்போம்!" நயினார் நாகேந்திரன் பேச்சு! சென்னை : தமிழ்நாடு பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் அண்மையில்…