கொரோனா தொற்றுநோயால் பாதிக்கப்படாமல் இருந்த ஒரே கண்டமான அண்டார்டிகாவிலும் தற்போது கொரோனா வைரஸ் பரவியுள்ளது. கொரோனா வைரஸ் அண்டார்டிகாவில் உள்ள சிலியின் இராணுவ மற்றும் ஆராய்ச்சி தளங்களில் பரவியது.
இங்கு 36 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்டார்டிகாவில் கொரோனா வைரஸின் பரவியதால் இப்போது கொரோனா வைரஸ் பூமியின் முழு நிலப்பரப்பிலும் பரப்பியுள்ளது. 26 ராணுவ வீரர்கள் மற்றும் 10 ஒப்பந்த ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளார். அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அனைவரும் சீராக நிலையில் இருப்பதாக ராணுவம் தெரிவித்துள்ளது. சிலியின் இராணுவ மற்றும் ஆராய்ச்சி தளத்தில் விஞ்ஞானிகள் உட்பட 60 பேர் தங்கியுள்ளனர். இந்த இடத்தில் மொத்தம் 24 ஒப்பந்த ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
இதுவரை அண்டார்டிகாவில் கொரோனா பரவவில்லை. கொரோனா பரவியதை அடுத்து அண்டார்டிக் கண்டத்தில் அனைத்து வகையான சுற்றுலாக்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், நவம்பர் 27 அன்று சிலியில் இருந்து சில பொருட்கள் அண்டார்டிகாவுக்கு வந்தன. கொரோனா வைரஸ் அங்கிருந்து பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
பிரிட்டிஷ் அண்டார்டிகாவில் உள்ள 1,000 பேரில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. இருப்பினும், இந்த பொருட்கள் வந்த பிறகு, கொரோனா தொற்று பரவியது என கூறப்படுகிறது.
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…