இத்தாலியை இடித்து தள்ளி அசுர வேகத்தில் அமெரிக்கா!தொற்று அதிகரிக்க டிரம்பின் பிடிவாதம் காரணமா??-ஓர் அலசல்

Published by
kavitha

டிரம்பின் பிடிவாதமே  தொற்று அதிகரிக்க காரணமா?ஓர் அலசல் தாங்களும் தங்கள் கருத்தை பதிவிடலாம்.

அமெரிக்கா  தன்னை வல்லரசு என்று நிருபிக்க ஒரு நிமிடம் ஒரு தயங்கியது கிடையாது.நீயா?? நானா?? போட்டியை உலகம் பார்க்க தவறியது இல்லை.அதிநவீன வசதிகள், கட்டமைப்புகள், தொழிட் நுட்பத்தில் அசுர வளர்ச்சி என அனைத்து துறைகளிலும் தனது ஆளுமை மிக்க அதிகாரத்தை காட்ட தவறியது கிடையாது. பிற நாடுகள்  எல்லாம் அமெரிக்காவை  எண்ணி அஞ்சி தருணம் எல்லாம் உண்டு இப்படி பிற நாடுகளுக்கு மத்தியில் கஞ்சிப்போட்டு கொண்டு நிமிர்ந்து நின்ற அமெரிக்காவையே ஆட்டியிருக்கிறது இந்த கொரோனா.

இவ்வைரஸ்-ன் பிறப்பிடமாக கூறப்படும் சீனாவிலிருந்து இத்தொற்று மிக வேகமாக உலகளவில் பரவி வருகிறது. அவ்வாறு இதன் பரவல் தற்போது அமெரிக்காவில் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது நியூயார்க் நகரம் தான்.தற்போது மட்டும் அமெரிக்காவில் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.38 லட்சத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.பலி எண்ணிக்கையானது 2,438 தாண்டி செல்கிறது.

மேலும் கடந்த இருவாரங்களுக்கு பலி எண்ணிக்கையும்; பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கையும் லட்சத்தை தாண்டும் என்று அந்நாட்டு அதிபரே எச்சரிக்கை விடுத்துள்ளார். உலக நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி கொண்டிருந்த வேளையில் அமெரிக்காவில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது என்று கண்டறிந்தனர்.பின்னர் அடுத்த சில தினங்களில் அசுர வளர்ச்சியடைந்து பாதிப்பு மிகவேகமாக பரவ தொடங்கியது ஆனால் வைரஸ் குறித்து ஏதோ வைரஸாம் என்று கிண்டலடித்து கொண்டிருந்தார் அமெரிக்கா அதிபர்.தற்போது நியூயார்க் நகரத்தை முழு ஊரடங்கு உத்தரவால் முடக்கி உள்ளனர்.

இவ்வாறு தான் விளைவுகள் இருக்கும் என்று  இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்று  மருத்துவ துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அதை அதிபர் டிரம்ப் ஏற்கவில்லை. எதற்கு முழு ஊரடங்கு உத்தரவு?? அது தேவையில்லை என்று அவர் சமீபத்தில் கூட கூறியிருந்தார்.இந்நிலையில் கருவேப்பிலையாக எனக்கருதிய அமெரிக்கா தற்போது இவ்வைரஸ் தொற்றால் பதறிபோய் உள்ளது.இந்த விவகாரத்தில் அமெரிக்கா பரம எதிரி நாடுகளின் கதவை தட்டுகிறது.வீரியம் தெரியாமல் விளையாடியதன் விளைவு நியூயார்க்கில் மட்டும், 517 பேர் மடிந்தது. இத்தொற்று பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட இத்தாலியை பின்னுக்கு தள்ளி தொற்று உள்ளோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தை தொட்டு உள்ளது.

அவ்வாறு என்றால் அமெரிக்காவின் நிலைமை தற்போது எப்படி உள்ளது என்று தங்களுக்கு புரிந்து இருக்கும்.இது மேலும் உயர்ந்துள்ளது. 1.38 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் நியூயார் நகரத்தில் மட்டும், 52 ஆயிரம் பேருக்கு இவ்வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. 3 நாட்களில்  உயிரிழந்தோர் எண்ணிக்கையானது 2 மடங்காக அதிகரித்து உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, கடந்த வாரத்தில் 8,000மாக இருந்தது ஆனால் ஒரு வாரத்துக்குள், 1.38 லட்சத்தை தாண்டி அசுர வேகத்தில் பரவி உள்ளது.

இன்னும் நிலைமை  மோசமாகி வரும் சூழலில் நியூயார்க் நகரில் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவை தற்போது  அதிபர் அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் அதே போல் நியூஜெர்சி, கனெக்டிகட் போன்ற பகுதிகளிலும் இதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக   டிரம்ப்  தற்போது கூறியுள்ளார். ஆனால் அதிபரின் இந்த முடிவிற்கு நியூயார்க் கவர்னர் ஆன்ட்ரூ கியூமோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சீனாவில் பாதிப்பு ஏற்பட்டபோது வூஹான் நகரை முடக்கினர். அதே போல நியூயார்க் நகரை முடக்குவது எல்லாம் அர்த்தமில்லாதது என்று ஊடரங்கு தொடர்பாக கூறியுள்ளார்.இவ்வாறு அங்கு இருவருக்கும் கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பிற்கு கடுமையாக ஆளாகியதாக இத்தாலி கூறப்பட்டது.அங்கு மக்கள் வைரஸ் பாதிப்பால் பாதிக்கப்பட்டு கொத்து கொத்தாக மடிந்தனர்.மலைப்போல் மடிந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து அங்கு பிணக்குவியல்கள்;கண்ணால் பார்க்க முடிந்த கல்லறைகளே அதிகம் என்று இருக்க தன் வாழ்நாளில் இப்படி ஒரு அழிவை அந்நாடு சந்தித்து இருக்காது என்று எல்லாம் இத்தாலி குறித்து நிமிடத்திற்கு நிமிடம் தகவல் வெளியானது.இதனால் கொரோனா பாதிப்பில் கடுமையாக பாதிக்கப்பட்ட நாடு இத்தாலி தான் என்று கூறி வந்தனர். ஆனால் தற்போது இத்தாலியை ஒரு அடி பின்னுக்கு தள்ளி அசுர வேகத்தில் அமெரிக்கா முன்னேறி கொண்டிருக்கிறது. சர்வ வல்லமை படைத்த நாடு என்று கூறப்படும் அமெரிக்கா  பிற நாடுகளுக்கு எல்லாம் கொரோனா பாதிப்பிற்காக பல மில்லியன் டாலர்களை நிதியுதவியாக அள்ளித்ததை மறுப்பதற்கு இல்லை ஆனால் இவ்விவகாரத்தில் அதிரடியான நடவடிக்கைகள் மூலமாக அமெரிக்க மக்களை பாதுக்காக்க வேண்டும் என்பதே அனைவரின் ஒருமித்த குரலாக உள்ளது.

Published by
kavitha

Recent Posts

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

பட்டைய கிளப்பும் புஷ்பா-2.! மிரட்டல் டிரெய்லர் இதோ…

சென்னை : இயக்குநர் சுகுமார், நடிகர் அல்லு அர்ஜூன் கூட்டணியில் உருவாகி இருக்கும் 'புஷ்பா 2' திரைப்படம் வரும் டிசம்பர்…

9 hours ago

“2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தருமபுரியில் போட்டி” – மாவட்ட தலைவர் சிவா!

தருமபுரி : தவெக தலைவர் விஜய், 2026 தேர்தலில் தாம் போட்டியிட இருக்கும் தொகுதி குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறார்.…

9 hours ago

“அடுத்த 9 நாட்களில் மழைக்கு வாய்ப்பு இல்லை” வானிலை ஆய்வாளர் கொடுத்த அப்டேட்.!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

11 hours ago

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

12 hours ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

12 hours ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

13 hours ago