கொரோனா வைரஸ் இந்தியாவில் தான் உருவாகியுள்ளது! சீன விஞ்ஞானிகளின் ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

கொரோனா வைரஸ் இந்தியாவில் தான் உருவாகியுள்ளதாக shanghai institute of biological sciences விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளார்.
இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொடிய கொரோனா வைரஸானது முதலில் சீனாவின் வுகாண் மாகாணத்தில் தான் உருவானதாக கூறப்பட்டது. இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை 14 லட்சத்துக்கும் மேலானோர் உயிரிழந்துள்ளனர் இந்த வைரஸை தடுக்க தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், shanghai institute of biological sciences விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், தற்போது ஒரு புதிய தகவலை தெரிவித்துள்ளனர். அதன்படி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் வைரஸானது இந்தியா அல்லது வங்கதேசத்தில் உருவாகியிருக்கலாம் என அவர்கள் கூறியுள்ளனர்.
இவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில், இந்த கொரோனா வைரஸ் வுகானில் தோன்றவில்லை என்றும், இந்த வைரஸ் பரிமாறும் இந்த இந்த வைரஸ் ஆனது புகாரில் பரிமாற்றம் நடைபெறவில்லை என்றும், இந்த வைரஸ் பரிமாற்றம் இந்திய துணை கண்டத்தில் இருந்திருக்கலாம் என்றும் கூறியுள்ளனர். சுமார் 4 மாதங்களுக்கு முன்னதாகவே இந்நோய் பரவியிருக்கலாம் என்று கணித்துள்ளனர். ஆனால் சீன விஞ்ஞானிகள் இந்த கண்டுபிடிப்பை இந்திய விஞ்ஞானிகள் கடுமையாக எதிர்த்ததோடு, விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் முற்றிலும் தவறானது என்றும் தெரிவித்துள்ளனர்.