ஒரு லட்சத்தை தாண்டியது கொரோனா உயிரிழப்புகள்.!

கொரோனா வைரஸின் தாக்கம் உலக்கையை அச்சுறுத்தி வருகிறது. உலகில் பெரும்பாலான நாடுகளில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதித்துள்ளது.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியுள்ளது. கொரோனா வைரஸால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது. இதுவரை கொரோனாவிற்கு பலியானோர் எண்ணிக்கை 1,00,260-ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 3,69,108-ஆக உள்ளது. அதிகமாக உயிரிழந்தோரில் இத்தாலி (18,849) முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக அமெரிக்கா (17,919), ஸ்பெயின் (15,970), பிரான்ஸ் (12,210) ஆகிய நாடுகளில் உள்ளன.