டிரம்ப் கலந்துகொண்ட மாநாட்டில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி ..!

Default Image

அமெரிக்காவில் தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆட்கொல்லி வைரசால் வாஷிங்டனில் 16 பேரும், கலிபோர்னியா மாகாணத்தில் ஒருவரும் , நேற்று முன்தினம் புளோரிடா மாகாணத்தில் 2 முதியவர்கள் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் தற்போது வரை கொரோனா வைரசால்  பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 350-க்கும் மேலாக உள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் மேரிலாந்து மாகாணத்தில் நடைபெற்ற  அரசியல் மாநாட்டில் டிரம்ப், மைக் பென்ஸ் மற்றும் சில முக்கிய தலைவர்கள் கலந்துகொண்டனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நியூஜெர்சி மாகாணத்தை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அவரை மருத்துவமனையில் தனி வார்டில் வைத்து சிகிக்சை கொடுத்து வருகின்றனர். 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்