20,000 ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்குதல் இருந்துள்ளதாக அரிசோனா பல்கலைக்கழக உயிரியல் அறிஞர்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவின் வுஹான் நகரத்தில் இருந்து பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் உலக நாடுகளில் பரவி பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்போது கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா, டெல்டா பிளஸ் என்று பல வகையாக பரவ தொடங்கியுள்ளது. இதன் காரணத்தால் உலக மக்கள் அனைவரும் கொரோனா வைரஸிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்ள தடுப்பூசிகளை போடுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.
அதே வேளையில் ஆராய்ச்சியாளர்கள் இந்த கொரோனா வைரஸ் தொடர்பாக ஆய்வுகளையும் நடத்தி வருகின்றனர். அமெரிக்காவின் அரிசோனா பல்கலைக்கழக உயிரியல் அறிஞர் டேவிட் என்ராட் தலைமையில் குழு கொரோனா வைரஸ் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில் இந்த கொரோனா தொற்று கிருமி 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்துள்ளது என்பதை கண்டுபிடித்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் பல ஆண்டுகள் வரை நீடித்து இருந்துள்ளது. மேலும் இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக கிழக்கு ஆசிய நாட்டு மக்களின் மரபணுக்கூறில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த கொரோனா பாதிப்பு கிழக்கு ஆசிய நாடுகளான சீனா, ஜப்பான், தைவான், வடகொரியா, தென்கொரியா மற்றும் மங்கோலியா ஆகிய நாடுகளில் வாழ்ந்த மக்களுக்கு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சியாளர்கள் 26 வேறுபட்ட நாடுகளை சார்ந்த 2500 மக்களின் மரபணுவை சோதனை செய்துள்ளனர். இவர்கள் மேற்கொண்ட சோதனையில் இவர்களின் முன்னோர்களிடமிருந்து வரக்கூடிய ஜீன்களில் ஏற்கனவே கொரோனா வைரஸ் இருந்ததற்கான அடையாளங்களை கண்டு பிடித்துள்ளனர்.
இதன்படி, இதற்கு முன்னரும் கொரோனா வைரசுக்கு மக்கள் போராடியுள்ளது தெரியவந்துள்ளது. அப்போது தொற்று பாதிப்பு ஏற்பட்ட முன்னோர்களின் ஜீன்களில் கொரோனா வைரசுக்கான தடத்தை பதித்துள்ளது. அதில் போராடி பிழைத்தவர்களுடைய ஜீன் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் அவர்களது வம்சாவளியினருக்கு கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. கடந்த 20 வருடங்களாக பல கொரோனா தொற்றுகள் இருந்து வந்துள்ளது.
சார்ஸ், மெர்ஸ், எபோலா போன்ற வைரஸ் தாக்குதல் கண்டறியப்பட்டு அதனால் பலர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணத்தால் இந்த கொரோனா வைரஸ் 20,000 ஆண்டுகளுக்கு முன்பே வந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது. கொரோனா தடுப்பூசிகள் மூலம் இந்த பரவலை கட்டுக்குள் கொண்டுவரமுடியவில்லை என்றால் இந்த பாதிப்பு எதிர்காலத்திலும் தொடர்ந்து வரும் என தெரிவித்துள்ளனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…