கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அனுமதி இல்லை! தென்கொரியாவில் அமைக்கப்பட்டுள்ள அட்டகாசமான நிழலகம்!
கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு அனுமதி இல்லை.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தென்கொரியாவில், கொரோனா பாதித்த நபர்களை கண்டறிந்து, தடுத்து நிறுத்தும் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்ட பேருந்து நிழலகத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
தென்கோரியாவில், தலைநகர் சியோலில் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் சூரிய வெப்பத்தில் இயங்க கூடிய கண்ணாடிகளால் சூழப்பட்ட பேருந்து நிழலகங்களை அந்நாட்டு அரசு அமைத்து உள்ளது. கொரோனாவால் பாதிப்படைந்த நபர்கள் யாரேனும் இதற்குள் நுழைய முற்பட்டால், அவர்களை ஸ்கேன் செய்து, காய்ச்சல் இருப்பது உறுதியானால் அவர்கள் உள்ளே நுழைவதற்கு அனுமதி மறுத்து விடுகிறது. மேலும் இந்த நிழலகம் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.