செப்டம்பருக்குள் கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும் – வெற்றியடைந்த சோதனையால் ரஷ்யா மகிழ்ச்சி!
நடத்தப்பட்ட இரண்டாம் பரிசோதனையின் வெற்றியாக வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா மருந்துகள் விநியோகிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் வீரியம் கடந்த பல மாதங்களாக சற்றும் குறையாமல் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், பல நாடுகளிலுள்ள ஆய்வுக்கூடங்களில் இதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் சோதனை நடைபெற்று வருகிறது. அது போல ரஷ்ய ராணுவம், மாஸ்கோவில் உள்ள கமலேயா (Gamaleya) நிறுவனம் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து கொரோனா மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த மருந்தை கொண்டு அண்மையில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையின் முடிவுகள் வெற்றியாக அமைந்ததை அடுத்து ஆகஸ்டில் மூன்றாம் கட்ட சோதனை நடைபெறும் என ரஷ்யா அறிவித்துள்ளதுடன், வருகின்ற செப்டம்பர் மாதத்தில் கொரோனா மருந்து நாடு முழுஇவதும் விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது.