கொரோனா தடுப்பு மருந்து சோதனை- வெற்றி அடைந்த ஆக்ஸ்போர்டு.. 10 கோடி தடுப்பூசிகள் ஆர்டர்!
கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நோக்கில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த மருந்தின் சோதனை வெற்றி அடைந்துள்ளது.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் 150 நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றனர்.
அதில் ஒரு பங்காக, இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்தது. அவர்கள் கண்டுபிடித்த மருந்தை மனிதர்களிடம் சோதனை செய்தனர். மேலும் அதற்க்கு 1077 தன்னாலர்வர்கள் முன்வந்தனர். அவர்களின் உடம்பில் கொரோனா தொற்று செலுத்தப்பட்டது.
அதன்பின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த கொரோனா தடுப்பு மருந்தை அவர்கள் மீது செலுத்தினார்கள். தடுப்பு மருந்து செலுத்தப்பட்ட 1077 பேருக்கு கொரோனா எதிர்ப்பு ஆற்றல் கிடைத்திருப்பதாக அவர்கள் நடத்திய சோதனை முடிவில் தெரியவந்துள்ளதாகவும், மருந்தின் சோதனை வெற்றி அடைந்துள்ளதாகவும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் சோதனை வெற்றி பெரும் என பிரிட்டன் அரசுக்கு நம்பிக்கை இருந்த நிலையில், 10 கோடி கொரோனா தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.