2021 தொடக்கத்திலிருந்தே ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி – WHO தலைவர்!

Default Image

2021 தொடக்கத்திலிருந்தே ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும் என உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார்.

உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து கொண்டே செல்லும் நிலையில், உலகின் பல நடுகல் கடந்த சில மாதங்களாக இதற்கான தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசிகளை கண்டறியும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. பல ஆய்வுகளின் முடிவுகள் வெற்றி பெற்றிருந்தாலும், முழுவதுமாக வெற்றியடைந்த தரமான தடுப்பூசி இன்னும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

ஆனால், மிதமான மற்றும் லேசான அறிகுறி உள்ளவர்களை குணப்படுத்தும் வகையிலான தடுப்பூசிகள் கண்டறியப்பட்டுள்ளது, அது சில இடங்களில் பயன்பாட்டிலும் உள்ளது. இந்நிலையில், பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தற்பொழுது தடுப்பூசிகள் விநியோகம் துவங்கியுள்ள நிலையில் உலக சுகாதார நிறுவனம் இந்த நாடுகளுடன் தடுப்பூசி குறித்து கலந்தாலோசித்து தொடர்பில் இருப்பதாகவும், வருகின்ற 2021 ஆம் ஆண்டின் காலாண்டில் ஏழை நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி விநியோகிக்கப்படும் எனவும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் கூறியுள்ளார். மேலும், தற்பொழுது தான் இருள் நிறைந்த இடத்தில லேசாக ஒளி தோன்றியுள்ளது என கூறிய அவர், இதனை முழுமையான வெற்றி என கூறி விட முடியாது. உலகெங்கிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை குணப்படுத்தினால் மட்டுமே அது முழுமையான வெற்றி என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்