“கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்க அதிபர் டிரம்ப் திட்டம்!”- வெள்ளை மாளிகை

அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்துத்துறை அனுமதி அளித்த அடுத்த 24 மணிநேரத்தில், கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்க திட்டமிடப்படுவதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவில் பரவதொடங்கிள கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில், கொரோனாவை கட்டுப்படுத்த அமெரிக்கா, “அஸ்ட்ரா ஜெனிகா” என்ற மருந்தை கண்டுபிடித்துள்ளது. அமெரிக்காவில் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்ட அதிபர் டிரம்ப், கொரோனாவுக்கான தடுப்பு மருந்து இன்னும் ஒருசில வாரங்களில் அறிமுகமாகும் என தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், பரிசோதனையில் உள்ள கொரோனா தடுப்பூசிக்கு அந்நாட்டின் உணவு மற்றும் மருந்துத்துறை அனுமதி அளித்த அடுத்த 24 மணி நேரத்தில், இந்த தடுப்பூசி நாடு முழுவதும் இலவசமாக வழங்க திட்டமிட்டுவருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025