விலங்குகளுக்கு கொரோனா தடுப்பூசி – ரஷ்யாவின் சாதனை..!

- ரஷ்யாவில் விலங்குகளுக்காக கண்டுபிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி செல்லப்பிராணிகளுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.
உலகில் கொரோனா தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டு வருவதால், இதை வெல்ல தடுப்பூசி ஒன்றையே ஆதாரமாக கொண்டுள்ளனர். இந்நிலையில் பல நாடுகளில் தடுப்பூசி போடும் பணி தீவிரமாகியுள்ளது. ரஷ்யாவில் மனிதர்களுக்காக ஸ்புட்னிக் வி என்ற தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பல நாடுகளில் இத்தடுப்பூசியை செலுத்தியும் வருகின்றனர்.
தற்போது மனிதர்களுக்கு மட்டுமில்லாது நாய், பூனை, சிங்கம், புலி போன்ற விலங்குகளுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இதனால் விலங்குகளை பாதுகாக்கும் பொருட்டு ரஷ்யா விலங்குகளுக்கான கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருந்தது. அதன்படி, விலங்குகளுக்காக கார்னிவக்-கொவாக் என்ற கொரோனா தடுப்பூசியை ரஷ்யா கண்டுபிடித்துள்ளது. மேலும், இந்த தடுப்பூசி 100 சதவீதம் விலங்குகளுக்கு பயனளிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
இந்த கொரோனா தடுப்பூசியை முதன்முறையாக ரஷ்ய ராணுவத்தில் உள்ள செல்லப்பிராணி நாய்க்கு செலுத்தியுள்ளனர். இதனால் ரஷ்யா விலங்குகளுக்கென்று கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்து அதில் வெற்றியையும் அடைந்து சாதனை படைத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025