அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்தை அனைவருக்கும் கிடைக்க அதிபர் டிரம்ப் அரசு போராடி வருவதாக அவரின் மனைவி மெலனியா டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அந்தவகையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 60 லட்சத்தை நெருக்கவுள்ளது. இதன்காரணமாக, கொரோனா தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் அந்நாட்டு அரசு தீவிரமடைந்துள்ளது.
இந்தநிலையில், அமெரிக்க குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில், வெள்ளை மாளிகையில் இருந்து அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் காணொளி மூலம் உரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், தமது கணவர் டிரம்ப் முன்னேற்றத்தை உருவாக்கும் திறமை படைத்தவர் என கூறினார்.
மேலும் பேசிய அவர், அமெரிக்காவை சிறந்த நாடாக மாற்ற வேண்டும் என்ற லட்சியத்தை கொண்டவர் அதிபர் டிரம்ப் என கூறிய அவர், கொரோனா தடுப்பு மருந்தை அமெரிக்கர்கள் அனைவருக்கும் கிடைக்க டிரம்ப் அரசு போராடி வருவதாகவும், இன்னும் நான்காண்டுகளுக்கு
டிரம்ப் அதிபராக தொடர்ந்தால் அமெரிக்காவுக்கு மேலும் பலனளிக்கும் என தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…
மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…
மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில்,…
பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…
கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…