கிறிஸ்துமஸுக்கு முன் கொரோனா தடுப்பூசி விநியோகம் – ஃபைசர் பயோடெக் நிறுவனம்!

Published by
Rebekal

கிறிஸ்துமஸுக்கு முன் கொரோனா தடுப்பூசி விநியோகம் தொடங்கப்படலாம் என ஃபைசர் – பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வருட காலமாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது, இந்நிலையில் இதனால் பல கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் பல நாடுகளும் போட்டி போட்டு கடந்த சில மாதங்களாக தங்களது ஆராய்ச்சி கூடங்களில் இது குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். பல தோல்வியடைந்தாலும் சில மருந்துகள் வெற்றி அடைந்து வருகிறது. ஆனால் முறையான கொரோனா தடுப்பூசி என்று இதுவரை அதிகாரபூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனமும் ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து தயாரித்து வந்த  கொரோனா தடுப்பூசி தற்பொழுது 95% செயல்திறன் கொண்டுள்ளதாக நிறுவனத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபைசர் மற்றும் மாடர்னா ஆகிய இரு நிறுவனங்களின் தயாரிப்பும் தற்பொழுது முன்னிலையில் இருப்பதால் விரைந்து தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வரவேண்டுமென மருந்து தர கட்டுப்பாடுகள் இந்த அமைப்புகளிடம் கோரிக்கை விடுத்துள்ளன. எனவே இருவரும் போட்டி போட்டுக்கொண்டு யார் முதலில் வெளியிடுவது என்பது குறித்து தற்போது ஆராய்ச்சிகளை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர். அண்மையில் ஃபைசர் தடுப்பூசி தன்னார்வலர்கள் சிலருக்கு பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கடுமையான பக்கவிளைவுகள் ஏதும் இல்லை எனவும் தற்பொழுது மருந்து தயாரிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

95 சதவீத வெற்றியை ஃபைசர் -பயோஎன்டெக் நிறுவனத்தின் தடுப்பூசி கொண்டிருப்பதால் வருகிற கிறிஸ்துமஸுக்கு முன்பதாகவே தடுப்பூசி விநியோகம் நடைபெறும் எனவும் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய பயோஎன்டெக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி உகுர் சாஹின் அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் தடுப்பூசிக்கான நிபந்தனை ஒப்புதல் டிசம்பர் இரண்டாம் பாதியில் பெறலாம் எனவும், அனைத்தும் சரியாக நடக்கும் பட்சத்தில் கிறிஸ்துமஸுக்கு முன்பதாக தடுப்பூசி விநியோகத்தை துவங்குவோம் எனவும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

ஆஸ்திரேலிய இளம் வீரரிடம் வம்பிழுத்தாரா விராட் கோலி? ரிக்கி பாண்டிங் கூறியதென்ன?

மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…

15 minutes ago

Live : மாணவி பாலியல் வழக்கு முதல்… மலையாள எழுத்தாளர் மறைவு வரை…

சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…

3 hours ago

எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் மறைவு : பினராயி விஜயன் முக்கிய ‘துக்க’ அறிவிப்பு!

திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…

3 hours ago

வாழ்த்துக்கள் தம்பி., குகேஷை நேரில் அழைத்து ‘சூப்பர்’ கிஃப்ட் கொடுத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…

4 hours ago

பாக்சிங் டே டெஸ்ட் : ஆஸ்திரேலியா அணி பேட்டிங்., அறிமுக போட்டியில் அசத்திய இளம் வீரர்!

மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…

4 hours ago

பாலியல் வன்கொடுமை வழக்கு : கைதான ஞானசேகரனுக்கு மாவு கட்டு., நீதிமன்ற காவல்!

சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…

5 hours ago