கொரோனா ரிப்போர்ட் : 37,27,947 பேருக்கு கொரோனா உறுதி.! பலி எண்ணிக்கை 2.58 லட்சமாக உயர்வு.!
உலகம் முழுக்க 37 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. 2.58 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.
உலக மக்களை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதானால் பெருமபாலான நாடுகளை சேர்ந்த மக்கள் தங்கள் அன்றாட வாழ்வை இழந்து தவிக்கின்றனர்.
உலகம் முழுக்க இதுவரை கொரோனாவால் 37,27,947 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை 2,58,344 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதில் கொரோனவுக்கான சிகிச்சை முடிந்து நலமுடன் இதுவரை 12,42,432 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
இதில், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. அந்நாட்டில் இதுவரை 12,37,633 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 72,271 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். அடுத்த இடத்தில், ஸ்பெயின் உள்ளது. அந்நாட்டில் 2,50,561 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 25,613 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.