விஜய்யின் தமிழன் படத்தை இயக்கிய மஜித் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாகவும், அவரின் சிகிச்சைக்காக கே. ஜி. ஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் பணம் செலுத்தி உதவியதாகவும் கூறப்படுகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் ஊரடங்கில் தளர்வு செய்யவும் தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால் கொரோனா தொற்று சென்னை உள்ளிட்ட சில இடங்களில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் சென்னை ஆகிய மாவட்டங்களில் வரும் 19ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி இரவு 12 மணிவரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனாவால் பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டது மட்டுமில்லாமல் சிலர் உயிரிழந்தும் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2002ல் விஜய் நடிப்பில் வெளியான ‘தமிழன்’ என்ற படத்தை இயக்கியவர் மஜித். தற்போது இவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தனது சிகிச்சைக்கான பணத்தை மருத்துவமனையில் கட்ட முடியாமல் அவதி பட்டதால் திரையுலகை சேர்ந்த பலரிடம் உதவி கேட்டுள்ளார். அப்போது பிரபல தயாரிப்பு நிறுவனமான கே. ஜி. ஆர் ஸ்டுடியோஸ் உரிமையாளரான ராஜேஷ் மஜித் அவர்களுக்கு சிகிச்சைக்கான பணத்தை செலுத்தி உதவியுள்ளார். இந்த கே. ஜி ஆர் ஸ்டுடியோஸ் தான் அஜித்தின் விஸ்வாசம் படத்தின் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…
சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார். இதன் காரணமாக…
சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…
துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…
ஈரோடு : கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…
டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…