#Justnow:முதல் முறையாக ஒரே ஒருவருக்கு கொரோனா;முழு ஊரடங்கு அமல் – அதிபர் உத்தரவு!

Default Image

கடந்த 2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகம் முழுவதும் கொரோனா தீவிரமாக பரவிய நிலையில்,வடகொரியாவில் யாருக்கும் கொரோனா இல்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருந்தது.குறிப்பாக,வட கொரியாவில் உள்ள 25 மில்லியன் மக்களில் யாருக்கும் தடுப்பூசி போடவில்லை என்று கூறப்படுகிறது.உண்மையில்,வடகொரியா அரசு சீனா, ரஷ்யா மற்றும் உலக சுகாதார அமைப்பு (WHO) ஆகியவற்றின் தடுப்பூசி சலுகைகளை நிராகரித்துள்ளது.

இந்நிலையில்,இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு,வட கொரியாவில் முதல் கொரோனா வழக்கு பதிவாகியுள்ளது.இதனால்,வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்,கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்பாக நாட்டின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி,கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ‘முழு ஊரடங்கு’ அமல்படுத்த  உத்தரவிட்டுள்ளார்.

மேலும்,”குறுகிய காலத்திற்குள் கொரோனாவை அகற்றுவதே குறிக்கோள்.அதே சமயம்,மக்களின் விழிப்புணர்வின் காரணமாக ஊரடங்கை சமாளித்து கொரோனாவை நாங்கள் நிச்சயமாக வெல்வோம்” என்று கிம் ஜாங் உறுதியளித்துள்ளார்.

இதனிடையே,ஜனவரி 3,2020 முதல் இந்த ஆண்டு மே 11 வரை,வட கொரியாவில் யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்றும், பூஜ்ஜியமாக இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் WHO தனது தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
NTK Leader Seeman - TVK leader Vijay
DMK MP Kanimozhi
Virat Kohli
ind vs nz - jadeja
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi