பிரபல நடிகரான RJபாலாஜியின் தாய்க்கு கொரோனா.! சோகத்தில் ரசிகர்கள்.!
மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்து வரும் ஆர். ஜே. பாலாஜியின் தாயாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் குணமடைந்து வீடும் திரும்பியுள்ளனர்.மேலும் சிலரது உயிரையும் கொரோனா பறித்துள்ளது .அதில் பல சினிமா பிரபலங்களும் அடங்கும். ஆம் கடந்த சில மாதங்களாக சினிமாயுலகில் பல பிரபலங்களின் இழப்புகளை சந்தித்து வருகிறது. சிலர் கொரோனா தொற்றுக்கு பலியாகியும், சிலர் நோய் வாய்ப்பட்டும், இன்னும் சிலர் தற்கொலையும் செய்துள்ளனர்.
மீடியாவில் ஆர்ஜே வாக அறிமுகமாகி, சினிமாவில் களமிறங்கி ஹீரோவாகும் நடித்து பிரபலமானவர் ஆர். ஜே. பாலாஜி. இவர் தற்போது நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தில் நடிக்கிறார். இந்த நிலையில் தற்போது அவரது தாய்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே அவரை அமைந்தகரையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த செய்தி தற்போது கோலிவுட் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் பாலாஜியின் தாயார் குணமடைந்து வீடு திரும்ப ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.