ஒரு மாதத்திற்கு பின் சீனாவை மீண்டும் தாக்கும் கொரோனா வைரஸ்.
கொரோனா வைரஸானது முதலில் தனது தீவிர தாக்குதலை நடத்தியது சீனாவில் தான். அங்கு பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்ட நிலையில், ஆயிரக்கணக்கில் மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். சீனாவில் டிசம்பர் மாத இறுதியில் முதன்முறையாக ஊஹான் மாகாணத்தில் இந்த கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
தொடர்ந்து இந்த வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டனர். ஊஹானில் மார்ச் முதல் வாரத்தில் பாதிப்பு குறைந்த நிலையில், 76 நாள் ஊரடங்குக்கு பின் கடந்த மாதம் 8ம் தேதி ஊஹானில் முழு ஊரடங்கு விலக்கப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பியது.
இந்நிலையில், தற்போது ஒரு மாதத்திற்கு பின் ஊஹானில் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்நாட்டின் சுகாதாரத்துறை இதனை உறுதி செய்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட நபரின் மனைவி, உள்ளிட்ட 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
கோவை : சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம். கட்டப்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்…
புதுச்சேரி : வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புதுச்சேரியில் 25.11.2024 முதல் 29.11.2024 வரை கன…
நாகை : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…
பெங்களூர் : இது தாங்க டீம் என்கிற வகையில் இப்படி ஒரு டீமுக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருந்தோம் என…
ஜெட்டா : ஐபிஎல் மெகா ஏலத்தின் 2-வது மற்றும் கடைசி நாளான இன்று ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில்,…
தூத்துக்குடி : தென் கிழக்கு வங்கக்கடலில் நிலைக் கொண்டு இருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகைக்கு தென் கிழக்கே…