டொனால்ட் ட்ரம்ப் நண்பருக்கு கொரோனா – வருத்தத்துடன் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பதிவு!
கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் பல இடங்களில் இந்த வைரஸை தடுக்க ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டது. மேலும், இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் அரசு நடைமுறைபடுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த வைரஸ் பணக்காரர்கள் மற்றும் உயர்ந்த அரசியல்வாதிகளை விட்டு விடுமா என்ன..? தற்போது அமெரிக்க பிரதமர் டொனால்ட் ட்ரம்பின் நண்பர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ட்ரம்ப், எனது நண்பர் செனட்டர் சீனாவிலிருந்து வந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அவர் விரைவில் குணமடைவார். நான் அவரை சந்தித்தேன், மிகவும் உற்சாகமாக தான் உள்ளார் என கூறியுள்ளார். இதோ அந்த பதிவு,
My friend (always there when I’ve needed him!), Senator @RandPaul, was just tested “positive” from the Chinese Virus. That is not good! He is strong and will get better. Just spoke to him and he was in good spirits.
— Donald J. Trump (@realDonaldTrump) March 23, 2020