பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு கொரோனா..!!

கொரோனா தொற்று தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இந்தி திரைப்பட நடிகர் அமீர்கானுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து மருத்துவமனையில் சிக்கிச்சை பெற்று வருகிறார்.