நடிகை மனிஷா யாதவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரொனோ 2வது அலையின் தாக்கம் தற்போது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் விழிப்புடன் செயல்படுமாறும், கொரோனா விதிமுறைகளை கையாளுமாறும் அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் காரணமாக அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள், பொதுமக்கள் என பலர் பாதிக்கப்பட்டு குணமடைந்து வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ் சினிமாவில் ஆதலால் காதல் செய்வீர், வழக்கு என் 18/9, திரிஷா இல்லன்னா நயன்தாரா, ஒரு குப்பை கதை, போன்ற திரைப்படங்களில் நடித்த நடிகை மனிஷா யாதவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனை அவரே தனது ட்வீட்டர் பக்கத்தில் உறுதி படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ” எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நான் விரைவில் மீண்டுவிடுவேன். இதுவரை எதுவும் மோசமாக இல்லை. ஆனால், எப்போதாவது லேசாக மூச்சுத் திணறல் ஏற்படுகிறது. கொரோனாவை மொத்தமாக் தாண்டி வருவதே சிறந்தது ” என்று பதிவிட்டுள்ளார்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…