சீனாவில் புதியதாக 63 பேருக்கு கொரோனா.!
நேற்று சீனாவில் புதிதாக 63 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
சீனாவில் நேற்று புதிதாக 63 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 61 பேர் வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள்.இதனால் சீனாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 82 ஆயிரத்து நெருங்கி வருகிறது. மேலும் நேற்று இரண்டு பேர் பலியானதால் பலி எண்ணிக்கை 3,336 ஆக அதிகரித்துள்ளது.
சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது. முதன்முதலில் கொரோனா உருவாக்கிய உகான் நகரில் நேற்று முன்தினம் ஊரடங்கு வாபஸ் பெறப்பட்டது. இந்த நேரத்தில் வெளிநாடுகளில் இருந்து திரும்பி வரும் சீனர்களால் இரண்டாம் கட்டமாக நோய் பரவல் உருவாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.