அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1.76 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகம் முழுவதிலும் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பரவி வரக்கூடிய கொரோனா வைரஸின் தாக்கம் பல நாடுகளிலும் தற்போதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கொரோனா பரவலை குறைக்க பல நாடுகளிலும் கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வந்தாலும், அவ்வப்போது கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் கடந்த பிப்ரவரி மாதத்திற்கு பிறகு கொரோனா அதிகளவில் பரவி வருகிறது. கடந்த ஜூன் மாதத்தில் 11 ஆயிரமாக இருந்த கொரோனா பரவல் தற்போது ஒன்றரை லட்சமாக கடந்து சென்றுள்ளது. இந்நிலையில், அமெரிக்காவில் ஒரே நாளில் 1,490 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,76,645 கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் 61,538 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை அமெரிக்காவில் 4 கோடியே 06 லட்சத்து 97 ஆயிரத்து 726 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…
சென்னை : 2025ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாள்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2025-ஆம்…