கொரோனா டைம்ல தான் ஹீரோயினுக்கு முத்தம் கொடுத்தேன் – அசோக் செல்வன் ஓபன் டாக்.!

Default Image

மாநாடு திரைப்படத்தின் பிரமாண்ட வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் வெங்கட் பிரபு மன்மதலீலை படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தின் கதையை வெங்கட் பிரபு உதவி இயக்குனர் மணிவண்ணன் எழுதியுள்ளார். இந்த படம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியாகிறது.

இந்த படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில், சம்யுக்தா ஹெக்டே, ஸ்ம்ருதி வெங்கட், ரியா சுமன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். படத்திற்க்கு இசையமைப்பாளர் பிரேம் ஜி இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான டிரைலர் வெளியிட்டு விழா நேற்று நடைபெற்றது.

 

அதில் பேசிய நடிகர் அசோக் செல்வன் ” நண்பர்களுடன் காலேஜ் முடிந்த காலத்தில் சென்னை 28 படம் பார்த்தோம், இப்போது வெங்கட் பிரபு அண்ணாவுடன் வேலை பார்த்தது மிகப்பெரிய வரம், கொரோனா டைம்ல பரிசோதனை முயற்சியாக இதை பண்ணலாம் என்றார். நடுவில் எனக்கு கொரோனா எல்லாம் வந்து போனது, அந்த நேரத்தில் எடுத்தது தான் இந்த முத்த காட்சிகள் எல்லாம். ஆனாலும் ஹீரோயின்கள் யாரும் பாதிப்பிற்கு உள்ளாகவில்லை. பலர் இந்தப் படம் ஏன் செய்தீர்கள் என கேட்டார்கள்….

இந்த படத்தில் எந்த கெட்ட விசயமும் இல்லை என எனக்கு தெரிந்தது. என்னை நான் ஒரு நடிகனாக மட்டுமே அடையாளப் படுத்தி கொள்ள விரும்புகிறேன். இந்தப் படம் மிக மிக நல்ல படம். எனக்கு வாய்ப்பு தந்த அனைவருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live tvk
thirumavalavan aadhav arjuna
RCB IPL
Aadhav Arjuna
TVK General Committee meeting
edappadi palanisamy sabanayagar appavu
Tamilnadu CM MK Stalin