விலங்குகளையும் விட்டு வைக்காத கொரோனா! முதன் முதலாக புலிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது!
சீனாவை தொடர்ந்து கொரோனா வைரஸ் நோயானது, மற்ற நாடுகளிலும் மிக தீவிரமாக பரவி வருகிறது. இந்த நோயினால் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால், அனைத்து நாடுகளிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மனிதர்களை மட்டுமே தாக்கிய இந்த கொரோனா வைரஸ் நோயானது தற்போது முதன் முதலாக விலங்குகளை தாக்கியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள புரோன்ஸ் உயிரியல் காப்பகத்தில் உள்ள 4 வயது பெண் புலிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உலகில் முதன்முதலாக கொரோனா தொற்று அமெரிக்காவில் உள்ள புலிக்கு கண்டறியப்பட்டுள்ளது.