பெய்ஜிங்கில் தினசரி 1 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை!
பெய்ஜிங்கில் தினசரி 1 மில்லியன் மக்களுக்கு கொரோனா பரிசோதனை.
முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் பரவி வருகிறது. இதுவரை இந்த கொரோனா வைரஸால், உலக அளவில், 9,046,208 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 470,703 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், சீன தலைநகரில், ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பெய்ஜிங்கில் மொத்த உணவு சந்தையின் மூலம் பலருக்கு மீண்டும் கொரோனா பரவ தொடங்கியுள்ளது.
தற்போது பெய்ஜிங்கில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டு வருகிற நிலையில், கொரோனா பரவலின் தொடக்கத்தில் இருந்ததை விட அதிகமான மக்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இதுவரை அங்கு 20 மில்லியன் மக்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அங்கு சோதனையின் தொடக்கத்தில் ஜின்ஃபாடி சந்தையில் பணிபுரிந்தவர்கள், கடைக்கு வந்தவர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களுக்கு மட்டும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது, நகரின் மற்ற பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் உணவு விநியோகஸ்தர்கள் மாற்றும் பார்சல் செய்பவர்கள் அனைவர்க்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.