சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. உலகளவில் கொரோனாவால் 1,519,213 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பின் எண்ணிக்கை 88,531 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களில் 330,877 பேர் குணமடைந்துள்ளார்கள். கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க மருத்துவ ஆய்வாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில் வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது ஐரோப்பிய நாடுகளில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்சை தொடர்து வைரஸ் தற்போது இங்கிலாந்திலும் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் வேகமாக பரவி வருவதால் பெரும் உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகிறது. இங்கிலாந்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் வைரஸ் தாக்குதலுக்கு 938 பேர் உயிரிழந்துள்ளனர். முன்னதாக, கடந்த 24 மணி நேரத்தில் மருத்துவமனைகளில் 828 பேர் உயிரிழந்த நிலையில், மேலும் 108 நோயாளிகள் ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் இறந்துள்ளனர். இதனால் இங்கிலாந்தில் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,097 ஆக அதிகரித்துள்ளது. மேலும் தற்போதைய நிலவரப்படி, அந்நாட்டில் 60,733 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளது.
சென்னை : இன்று (பிப்ரவரி 3) மறைந்த முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,…
நெதர்லாந்து: டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியில் உலக சாம்பியனான குகேஷை 2-1 என்ற கணக்கில் டைபிரேக்கரில் வீழ்த்தி கிராண்ட்மாஸ்டர்…
மும்பை : கடைசி டி20 போட்டியில் இங்கிலாந்து அணியை 150 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய…
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம் மண்டபத்தைச் சேர்ந்த 10 மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு இருப்பது மீனவ கிராமங்களில்…
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நாளை மறுநாள் (ஜன.5) அங்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பரப்புரை இன்று…
மலேசியா : பிசிசிஐ 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றுள்ளது. மலேசியாவின் கோலாலம்பூரில் உள்ள பியூமாஸ்…