மீண்டும் ஜப்பானை குறிவைக்கும் கொரோனா! ஜப்பானில் பரவும் கொரோனாவின் இரண்டாவது அலை!

Default Image

ஜப்பானில் பரவும் கொரோனாவின் இரண்டாவது அலை.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது. இந்நிலையில், ஜப்பானில் கொரோனாவின் முதல் அலை அந்நாட்டில் ‘ஜப்பான் மாடல்’ என அழைக்கப்பட்டது. இந்த ஜப்பான் மாடல் படிப்படியாகக் குறைந்து தற்போது இயல்புநிலை திரும்பியுள்ளதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அங்கு இரண்டாவது அலை பரவியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அங்கு, கொரோனா தாக்கம் குறைந்ததால் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு, பொது இடங்களில் மக்களின் நடமாட்டம் அதிகமாக காணப்பட்ட்டது. மக்களும் மாஸ்க் அணிந்தபடி தங்கள் அன்றாட வேலையில் மூழ்கத் துவங்கினர். கொரோனா வைரஸ் பொதுவாக நாள்பட்ட நோய்த்தாக்கம் கொண்ட முதியவர்களையே அதிகமாகத் தாக்குகிறது.

உலகிலேயே ஜப்பானில் தான் அதிகமான வயதானவர்கள் உள்ளனர். அங்கு வயதானவர்கள் உயிரிழக்கும் சராசரி வயது எண்பது ஆகும். ஜப்பானில் கொரோனா வைரஸ் பரவலின் இரண்டாவது அலை குறித்து, ஷோவா மருத்துவ பல்கலைக்கழக நோய்த்தொற்று நிபுணர் யோஷிஹிட்டோ நிகி கூறுகையில், நோய்தொற்று பரவலை விட பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஜப்பான் அரசு முன்னுரிமை அளித்ததன் விளைவாக தொற்று அதிகமாக பரவுகிறது என்றார்.

மேலும், ஜப்பான் இரவு விடுதிகளில் திறக்கப்பட்டதால், கொரோனா வைரஸ் அதிகமாக பரவுவதாக முதற்கட்ட ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது. அதனால் மாலை 6 மணிக்கு மேல் செயல்படும் உணவகங்கள் பார்கள் ஆகியவற்றைமூட நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்