கொரோனாவிலிருந்து மீண்ட பின்னரும் தென்படும் கொரோனா அறிகுறிகள் .!
கொரோனாவிலிருந்து மீண்ட பின்னரும் கொரோனாவுக்கான அறிகுறிகள் 3 மாதங்கள் வரை இருக்கலாம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின்பு மீண்ட நோயாளிகளுக்கு ஆறு மாதங்கள் வரை கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இருக்கலாம் என்று பிரிஸ்டலின் சவுத்மீட் மருத்துவமனை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
அவர்கள் நடத்திய ஆய்வில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 75 சதவீத நோயாளிகள் கொரோனாவிலிருந்து மீண்ட பின்னரும் கொரோனாவுக்கான அறிகுறிகள் இன்னும் உள்ளதாக கண்டறிந்துள்ளனர். இந்த நோயாளிகளுக்கு மூச்சு திணறல், அதிக சோர்வு மற்றும் தசைவலி போன்ற அறிகுறிகள் இருப்பினும் காய்ச்சல், இருமல் அல்லது வாசனை இழப்பு போன்ற அறிகுறிகளும் நோயாளிகளில் தென்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட சிலருக்கு கவலை, மனநலப் பிரச்சனைகள், முடி உதிர்வு, சோர்வு, அவ்வப்போது தலைவலி போன்றவையால் பாதிக்கப்படுவதாகவும், அவ்வாறு உள்ளவர்கள் மருத்துவர்களை அணுக வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட பின்னர் வரும் இது போன்ற நோய்களுக்கு பிந்தைய கோவிட் பராமரிப்பு மையம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.