அதிர்ச்சி தகவல் ! ரூபாய் நோட்டுகள், மொபைலில் 28 நாட்களுக்கு உயிர்வாழும் கொரோனா..!
கொரோனா வைரஸ் ரூபாய் நோட்டுகள் மற்றும் மொபைலில் 28 நாட்களுக்கு உயிர்வாழும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து, ஆஸ்திரேலிய நிறுவனமான சி.எஸ்.ஐ.ஆர்.ஓ(CSIRO) நடத்திய ஆய்வில், கொரோனா வைரஸ் “மிகவும் வலுவானது” என்று கண்டறியப்பட்டுள்ளதாகவும், நாம் அன்றாட பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகள் மற்றும் மொபைல்களில் கொரோனா வைரஸ் 28 நாட்களுக்கு உயிர்வாழக்கூடும் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சோதனையானது 50% ஈரப்பதத்துடன் 20 , 30 மற்றும் 40 டிகிரி செல்சியஸ்களில் எஃகு, கண்ணாடி, வினைல், காகிதம் மற்றும் பாலிமர் ரூபாய் நோட்டுகள் மற்றும் பருத்தி துணி ஆகியவற்றின் மேற்பரப்புகளில் நடத்தப்பட்டது.
இதன் மூலம் ஃப்ளு வைரஸை விட கொரோனா வைரஸ் நீண்ட காலம் உயிர்வாழ முடியும் என்று தெரிவித்துள்ளனர். ஃப்ளு வைரஸ் அதே சூழ்நிலையில் 17 நாட்கள் உயிர்வாழ முடியும். ஆனால் தற்பொழுது நடத்தப்பட்டுள்ள சோதனையில் கொரோனா 28 நாட்கள் உயிர்வாழமுடியும் என்று நிரூபணமாகியுள்ளது.
இந்த சோதனையானது 20 டிகிரி செல்சியஸ் மற்றும் அரை வெப்பநிலையில் இருட்டு அறையில் ( Dark Room ) வைத்து நடத்தப்பட்டுள்ளது, ஏனெனில் புற ஊதாக்கதிர்கள் மூலம் கொரோனா அழிந்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.