நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் 200- க்கும் மேற்பட்ட நோய் அறிகுறிகள் – ஆய்வில் தகவல்!

Default Image

நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் உடலில் உள்ள 10 உறுப்புகளில் 200- க்கும் மேற்பட்ட நோய் அறிகுறிகள்  உள்ளது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் பரவி வர கூடிய கொரோனா வைரஸ் தற்பொழுது வரையிலும் குறைந்தபாடில்லை. இந்த கொரோனாவால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளதுடன் தினமும் பாதிப்புகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. மேலும், உலகம் முழுதும் உள்ள பல நாடுகளில் இந்த கொரோனா வைரஸ் உருமாறி  பரவி வருகிறது.

இந்நிலையில், நீண்ட நாட்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளிடம் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் 56 நாடுகளில் இருந்து 3,762 தன்னார்வலர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில், இந்த ஆய்வு குறித்து வெளியிடப்பட்டுள்ள முடிவில் நீண்ட நாட்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடல் உறுப்புகளில் மொத்தம் 203 நோய் அறிகுறிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த நோயாளிகளிடம் அதிக அளவில் நடுக்கம், தோல் அரிப்பு, மாதவிடாய் சுழற்சியில் மாற்றம், பாலியல் செயலிழப்பு, இதய துடிப்பு, சிறுநீர் கட்டுப்பாடு சிக்கல், நினைவாற்றல், இழப்பு, மங்கலான பார்வை வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பல நோய்கள் உள்ளதாக கூறப்படுகிறது.  மேலும், இதே நோயாளிகளிடம் சுவாச செயல்பாடு குறித்து ஆய்வு செய்வதற்கு தற்பொழுது ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்