அமெரிக்காவின் தேசிய அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் கொரோனா வைரஸ் குறித்து வெளியான புதிய தகவல்.
இன்று உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை அழிப்பதற்காக, மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அமெரிக்காவின் தேசிய அறிவியல் மையத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்ததில் ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விஞ்ஞானிகள், மக்களை பேச வைத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். அதில் அவர்களை, குறிப்பிட்ட சில வார்த்தைகளை மெதுவாகவும், பிறகு வேகமாகவும் உச்சரிக்க செய்தனர். பின், இந்த சோதனையில், கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் ஒரு நிமிடம் சத்தமாக பேசும்போது, கொரோனா வைரசை சுமந்த, கண்ணுக்கு புலப்படாத 1000க்கும் மேற்பட்ட உமிழ்நீர்த் திவலைகள் உருவாவதை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும், இந்த ஆய்வின் போது, ஒரு சிலர் சத்தமாக பேசும்போது, மற்றவர்களை விட 10 மடங்கு அதிகமான வைரசை காற்றில் பரப்புவதும் கண்டுபிடிக்கப்படடுள்ளது. இவ்வாறு காற்றில் பரவும் உமிழ்நீர்த் திவலைகள், 8 நிமிடம் முதல் 14 நிமிடம் வரை மிதந்துகொண்டிருப்பதையும் இவர்கள் கண்டுபிடிப்பித்துள்ளனர்.
இந்நிலையில், கொரோனா வைரஸை பரப்ப, இருமல், தும்மல் போலவே, சத்தமாக பேசுவதும் கூட, இந்த வைரசை பரப்பும் என்பது இந்த ஆய்வின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை : திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் அண்மையில் தனது தொகுதியான காட்பாடியில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் பேசுகையில், மாற்றுத்திறனாளிகள்…
சென்னை : திமுக அமைச்சர் பொன்முடி அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பேசுகையில், உடலுறவு குறித்து மறைமுகமாக இரு சமூகத்தை…
சென்னை : இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்திருந்திருக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழிசை சௌந்தரராஜன் வீட்டிற்கு நேரில் சென்று…
சென்னை : அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் பொன்முடி, விலைமாது பெண் பற்றி கதை கூறினார்.…
பெங்களூரு : நேற்றைய ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் , டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் விளையாடின. இதில்…
சென்னை : தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் பொன்முடி சமீபத்தில் ஒரு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, அவர் பேசிய பேச்சுக்கள்…